இந்தியாவிலும் வூஹான் வைரஸ்; தென் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதி..!

India reports its first case of Wuhan virus

India reports its first case of Wuhan virus: சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வேகமாக பரவி வரும் மர்மமான கொரோனா வைரஸ், இந்த நோய்கிருமிக்கு சீனாவில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் பாதிப்பு – சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு வசதிகள் இல்லை!

இந்நிலையில், இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் ஒருவருக்கு வூஹான் வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய அரசு வியாழக்கிழமை (ஜன. 30) உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்திய நாட்டின் முதல் வூஹான் வைரஸ் சம்பவம் ஆகும்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த நபர் சீனாவில் வூஹான் பல்கலைக்கழக மாணவர் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் பாதிப்பு – இந்தியாவின் உதவியை நாடும் சீனா!

மேலும், நோயாளி சீரான நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.