கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா: 90 ஆயிரத்தை கடந்தது!

சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரமாக உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிகை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சீனாவைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. மார்ச் 25ம் தேதி இந்தியாவில் 1000த்துக்கும் கீழ் என்ற அளவில் இருந்தது. அன்று முதல் தொடர்ந்து லாக்டவுன் இந்தியாவில் இருந்து வருகிறது. இதுவரை மூன்று முறை லாக்டவுன் நீடிக்கப்பட்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு வெறும் இரண்டு மாதத்தில் 90 ஆயிரமாக இந்தியாவில் உயர்ந்துள்ளது.

ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி. சீனாவில் 82,947 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 3,549 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,927 ஆக உயர்ந்துள்து. இதுவரை இந்தியாவில் 2,872 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 53,946 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 34,109 பேர் மருத்துவனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 89,420 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைக்கு உலகிலேயே மிக அதிகமான பாதிப்பு என்பது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 10,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரஷ்யாவில் 2,36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு என்பது மிகமிக குறைவு ஆகும். இதுவரை 2,537 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இப்போது கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலக அளவில் தொற்று பாதித்த அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்திற்கு முந்தியுள்ளது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 30,706 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,135 போ் பலியாகினா். இதேபோல், தமிழகத்தில் 10,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குஜராத்தில் 10,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 625 போ் பலியாகியுள்ளனர்.

தில்லியில் 9,333 போ், ராஜஸ்தானில் 4,960 போ், மத்தியப் பிரதேசத்தில் 4,789 போ், உத்தரப் பிரதேசத்தில் 4,258 போ், மேற்கு வங்கத்தில் 2,576 போ், ஆந்திராவில் 2,355 போ், பஞ்சாபில் 1,946 போ், தெலங்கானாவில் 1,509 போ், பிகாரில் 1,179 போ், கா்நாடகத்தில் 1,092 போ், ஜம்மு-காஷ்மீரில் 1,121 போ்.

ஹரியாணாவில் 887 போ், ஒடிஸாவில் 737 போ், கேரளத்தில் 587 போ், ஜாா்க்கண்டில் 218 போ், சண்டீகரில் 191 போ், திரிபுராவில் 167 போ், அஸ்ஸாமில் 92 போ், உத்தரகண்டில் 88 போ், ஹிமாசல பிரதேசத்தில் 78 போ், சத்தீஸ்கரில் 67 போ், லடாக்கில் 43 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், கோவாவில் 17 போ், மேகாலயம், புதுச்சேரியில் தலா 13 போ், மணிப்பூரில் 7 போ், மிஸோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்தில் தலா ஒருவா் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.