Corona Virus: சீனா சென்ற வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர விசா கிடையாது – மத்திய அரசு

Corona virus wuhan India
Corona virus wuhan India

Corona Virus Wuhan: கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 24,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

‘இலங்கையில் தேசிய கீதம் இனி தமிழில் பாடப்படாது’ – இலங்கை அரசு அறிவிப்பு

உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப அந்நாடு முடிவு செய்துள்ளது. அதேபோல், இந்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர விசா கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், சீனர்கள் மற்றும் சீனா சென்ற வெளிநாட்டு பயணிகளின் வேலிட் விசாக்கள் (valid visa) ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பிப்., 8 முதல் டெல்லி -ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

கேரளாவில் 3வது கொரோனா வைரஸ் பாதிப்பு – மாநில பேரிடராக அறிவிப்பு