கொரோனா தடுப்பூசி மருந்தை பரிசோதனைக்கு அனுமதி – இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு ஆணையம்

corona vaccine

இந்­தி­யா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட கொரோனா தடுப்பு ஊசி மருந்தை மனி­தர்­க­ளுக்­குச் செலுத்தி பரி­சோ­தனை செய்ய இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு ஆணையம் அனு­மதி அளித்­துள்­ளது. மிக விரை­வில் நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு மருத்­து­வம­னை­களில் இந்த தடுப்­பூ­சியை வைத்து பரி­சோ­தனை நடை­பெற உள்­ளது.

உல­கம் முழு­வ­தும் கொரோனா கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூசி மற்­றும் தடுப்பு மருந்­தைக் கண்­டு­பி­டிக்­கும் ஆராய்ச்சி தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

பல நாடு­கள் இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ள நிலை­யில் இந்­தி­யா­வைச் சேர்ந்த பாரத் பயோ­டெக் என்ற நிறு­வ­னம் கொரோ­னா­வுக்கு எதி­ரான ‘கோவேக்­சின்’ என்ற தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டித்­துள்­ளது. இதற்­கான ஆராய்ச்­சி­யில் இந்­நி­று­வ­னத்­து­டன் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய கிரு­மித் தொற்று ஆய்வு நிறு­வ­ன­மும் இணைந்து செயல்­பட்­டன.

பல்­வேறு சோத­னை­க­ளுக்­குப் பிறகு இந்த தடுப்­பூசி விலங்­கு­க­ளுக்­குச் செலுத்தி பரி­சோ­திக்­கப்­பட்­டது. அதில் வெற்றி அடைந்­ததை அடுத்து மனி­தர்­க­ளுக்­குச் செலுத்தி பரி­சோ­தனை செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சோத­னை­யும் வெற்­றி­ய­டை­யும் பட்­சத்­தில் ‘கோவேக்­சின்’ தடுப்­பூசி மிக விரை­வில் மக்­கள் பயன்பாட்டுக்கு வரும்.