கொரோனா வைரஸ் பாதிப்பு – இந்தியாவின் உதவியை நாடும் சீனா

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதிலிருந்து தப்பிக்கும் வகையிலான மாஸ்க்குகளின் தட்டுப்பாடு நிலவி வருவதால், இந்தியாவின் உதவியை சீனா நாடியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, சீன அரசு என்95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்திவருகிறது. வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், மாஸ்க்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கு இந்த வைரஸின் தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, மாஸ்க்குகள் தேவைக்காக, சீனா, இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு

இதுதொடர்பாக, பேட்டியளித்த இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெயசீலன் கூறியதாவது, சீனாவில் என்95 மாஸ்க்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் தேவையை சீனா நாடியுள்ளது. நாங்கள் ஏற்கனவே இந்த வகை மாஸ்க்குகளை உற்பத்தி செய்து வருவதால், சீனாவிற்கு மாஸ்க்குகள் வழங்க தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்குரிய பணத்தின் ஒருபகுதியை முன்கூட்டி அட்வான்சாக அளித்தால், உடனடியாக மாஸ்க்குகள் டெலிவரி செய்ய தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில், என்95 வகை மாஸ்க்குகள், சில குறிப்பிட்ட ஆபரேசன்களின் போது மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை மாஸ்க்குகளின் தேவை இங்கு குறைவாகவே உள்ளதால், குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்துவருகிறோம். அவர்கள் முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்தால், தேவைக்கேற்ப மாஸ்க்குகளை தயாரித்து தர தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

என்95 வகை மாஸ்க்குகள் குறித்து சீனா மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலிருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக, மாஸ்க்குகள் வர்த்தகர் ஒருவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையாக வழங்கும் பொருட்டு, 1 லட்சம் என்95 மாஸ்க்குகள் தயாராக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்! மன அழுத்தத்தால் சீனாவில் முடங்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்