மிரட்டும் கொரோனா – சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு தனி ஆளாக வந்த சென்னை மாணவி

corona virus

Corona Virus : சீனாவில் படித்துவந்த மருத்துவக் கல்லூரி மாணவி வேலம், சீனாவில் இருந்து சிங்கப்பூர் வரை தனி ஆளாகவே வந்திருக்கிறார்.

சீனாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ். ஒரு வேளை யாராவது தொடர்ந்து தும்மினால் கூட அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கக் கூடுமோ என்று அச்சப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வூஹான் மாகாணத்தில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்ட 324 இந்தியர்கள் – கொரோனா தொற்று உள்ளதா?

இந்த நிலையில்தான் சீனாவின் தியான்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியான வேலம் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பியுள்ளார்.

அதுவும், தியான்ஜின் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் தனி ஒரு பயணியாக வேலம் வந்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானத்தில் யாருமே இல்லை.

வூஹான் நகரில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தியான்ஜின். இதுகுறித்து வேலம் கூறுகையில், “கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக சாலைகளில் கூட ஒரு சிலர்தான் நடமாடினார்கள்.

சில கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அந்த கடைகளிலும், மாஸ்க் அணிந்து கொண்டு உள்ளே வரவும் என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் தங்கியிருந்த விடுதி நிர்வாகம் தினமும் எங்களது உடல்வெப்ப நிலைய பரிசோதித்து தினமும் ஒரு மாஸ்க் கொடுக்கும்.

ஆப்ரிக்கா, நேபாளம் மற்றும் இரண்டு இந்திய மாணவர்களைத் தவிர தற்போது விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலம் சீனா, சிங்கப்பூர், சென்னை விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், சென்னை வந்தடைந்ததில் மகிழ்ச்சி என்றும் வேலம் கூறுகிறார்.

இந்திய பட்ஜெட் 2020-21 தாக்கல்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு