பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முழு விவரம் உள்ளே

Pongal Special Trains
Pongal Special Trains

பொங்கலை சொந்த ஊர்களில் கொண்டாடும் பொருட்டு ஏராளமான மக்கள் பயணம் செய்ய இருப்பதால், பொங்கல்  சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக அரசு பொங்கலுக்கு கூடுதலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்குவதாக அறிவித்து இருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பின்வரும் சிறப்பு ரயில்க்குள் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க – நிர்பயா வழக்கு – நால்வருக்கும் ஜன.22ம் தேதி தூக்கு! மரண தண்டனை குறித்த கேள்விகளும், பதில்களும்

சென்னை எக்மோரிலிருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

ரயில் எண் . 82601 சென்னை எக்மோர் – திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்:  சென்னை எக்மோரில் இருந்து  ஜனவரி 10ம் தேதி 18.50 மணிக்கு புறப்படும்  திருநெல்வேலியை அடுத்த நாள் 06.00 மணிக்கு அடையும்.

நிறுத்தங்கள்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துர் மற்றும் கோவில்பட்டி.

திருநெல்வேலியில் இருந்து தம்பரத்திற்கு சிறப்பு கட்டண ரயில்

ரயில் எண் .06002 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில்:  ஜனவரி 11ம் தேதி திருநெல்வேலியில் இருந்து 18.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள்  காலை 05.00 மணிக்கு தம்பரத்தை அடையும்.

நிறுத்தங்கள்: கோவில்பட்டி, சாத்துர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு.

தாம்பரம் – திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில்கள்

ரயில் எண் 82603 தாம்பரம் – திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 12ம் தேதி தம்பரத்திலிருந்து 19.20 மணிக்கு புறப்படும். அடுத்த காலை 06.00 மணிக்கு திருநெல்வேலியை அடையலாம்.

ரயில் எண் 82604 திருநெல்வேலி – தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் :  ஜனவரி 18ம் தேதி திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18 மாலை 18.15 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் காலை 05.00 மணிக்கு தாம்பரம் அடையலாம்.

நிறுத்தங்கள்: கோவில்பட்டி, சாத்துர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு.

நாகர்கோயில் முதல் தாம்பரம் வரை சுவிதா சிறப்பு ரயில்:  

ரயில் எண்.82606 நாகர்கோயில் – தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில்:

ஜனவரி 19ம் தேதி 17.00 மணிக்கு நாகர்கோயிலிலிருந்து புறப்படும். அடுத்த காலை காலை  05.00 மணிக்கு அடையும் தாமபறம் அடையும்.

நிறுத்தங்கள்: வலியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு.

தம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில்

ரயில் எண் 06075 தாம்பரம் – நாகர்கோயில் சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் :  ஜனவரி 20 ஆம் தேதி 11.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அடுட்டாஹ் நாள் 02.00 மணிக்கு நாகர்கோயிலை அடைகிறது.

நிறுத்தங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.

திருச்சிராப்பள்ளி சென்னை எக்மோரிலிருந்து சிறப்பு கட்டணம் ரயில்

ரயில் எண் .06026 திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சிறப்பு கட்டணம் ரயில் : ஜனவரி 11ம் தேதியன்று திருச்சிராப்பள்ளியில் இருந்து 14.30 மணிக்கு புறப்படும். அதே நாள், 20.15 மணிக்கு  சென்னை எக்மோர் அடையும்.

நிறுத்தங்கள்: ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம்.

சென்னை எக்மோரிலிருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

ரயில் எண் 82607 சென்னை எக்மோர் – திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் : ஜனவரி 11ம் தேதியன்று  23.50 மணிக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அடுத்த நாள் 11.45 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

நிறுத்தங்கள்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துர் மற்றும் கோவில்பட்டி.

திருநெல்வேலியில் இருந்து தம்பரத்திற்கு சிறப்பு கட்டண ரயில்

ரயில் எண் .06004 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில்: ஜனவரி 12ம் தேதியன்று திருநெல்வேலியில் இருந்து 18.15 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் 05.00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

நிறுத்தங்கள்: கோவில்பட்டி, சாத்துர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு.

தாம்பரத்திலிருந்து நாகர்கோயில் செல்லும் சுவிதா சிறப்பு ரயில்

ரயில் எண் 82609 தாம்பரம் – நாகர்கோயில் சுவிதா சிறப்பு ரயில்:   ஜனவரி 13 ம் தேதி 19.00 மணிக்கு தம்பரத்திலிருந்து புறப்பட்டும்.  அடுத்த நாள்  07.10 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.

நிறுத்தங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.

மேலும் படிக்க – கவுன்சிலர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கே இந்த கதின்னா!? – வைரல் வீடியோ

நாகர்கோயிலிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு கட்டண ரயில்

ரயில் எண் .06006 நாகர்கோயில் – திருச்சிராப்பள்ளி சிறப்பு கட்டண ரயில் : ஜனவரி 14ம் தேதியன்று  10.15 மணிக்கு நாகர்கோயிலிலிருந்து புறப்படும். அதே நாள்  18.00 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையலாம்.