மலேசிய தமிழ் ராப் பாடகர் யோகி பி, இசைக்கு உத்வேகம் அளித்ததற்காக சென்னையில் விருது பெற்றார்.!

மலேசிய தமிழ் ராப்பரான யோகி பி ராப் இசைக்கு உத்வேகம் அளித்ததற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் விருதை வென்றுள்ளார்.

இந்த ஹிப்-ஹாப் நட்சத்திரத்தின் உண்மையான பெயர் யோகேஸ்வரன் வீரசிங்கம். அனைவராலும் யோகி பி என்று அழைக்கப்படுவார். தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். குறிப்பாக பொல்லாதவன், விவேகம் மற்றும் ஆடுகளம் போன்ற படங்களில் தனது ராப் பாடல் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

விருதைப் பெற்ற பிறகு யோகி பி, “இந்த விருதை எனது உலகளாவிய தமிழ் ஹிப்-ஹாப் குடும்பத்திற்கும், உலகெங்கிலும் உள்ள எனது இசை ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்,” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தன்னை கௌரவித்த Behindwoods -க்கு நன்றியை தெரிவித்தார். பலரும் யோகியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.