சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் அப்படி என்ன தான் தவறு உள்ளது?

Whats that wrong with Chennai Airport Sign?

பிரபல ஹிந்தி நடிகையான சாபனா ஆஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்திருந்தார். அதில் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அறிவிப்பு பலகை. அப்படி என்ன தவறு அந்த பலகையில் உள்ளது.

ஹிந்தியில் சரியான அர்த்தத்தையும், ஆங்கிலத்தில் தவறான அர்த்தத்தையும் அந்த அறிவிப்பு உள்ளடக்கியுள்ளது. ஆங்கிலத்தில் ‘கம்பளத்தை உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என உள்ளது. ஆனால் அதன் உண்மையான அறிவிப்போ ‘கம்பளத்தில் அமர்ந்து உண்பது தடை செய்யப்பட்டுள்ளது’ என்று இருக்க வேண்டும்.

அமர்ந்து என்ற ஒற்றை வார்த்தை இல்லாத காரணத்தால் அறிவிப்பின் முழு பொருளும் மாறியுள்ளது. இந்த புகைப்படமானது 2015 யில் எடுக்கப்பட்டது. அப்போதே இதை பற்றி ஊடகங்கள் பேசியதால் அந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. ஆனால், நடிகை சாபனா ஆஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது இதனை பகிர்ந்தது சிறுது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.