அவசர நிலை காரணமாக திருச்சி – சிங்கப்பூர் SCOOT விமானம் திடீர் தரை இறக்கம்..!!

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற SCOOT ஏர்வேஸ் விமானம் (TR567) அவசர நிலை காரணமாக திடீர் தரை இறக்கப்பட்டது.

திருச்சி – சிங்கப்பூர் சென்ற விமானத்தில் Cargo Hold -இல் ஏற்பட்ட திடீர் புகை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 3.41 க்கு SCOOT விமானம் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானம் இன்று காலை சரியாக நள்ளிரவு 1.50 க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டது. அதிலிருந்து சரியாக 1 மணி நேரம் நெருங்கிய நிலையில் விமானத்தில் Cargo Hold இல் இருந்து புகை எச்சரிக்கை ஒலி கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சுமார் 36000 feet பறந்து கொண்டிருந்த விமானத்தை, விமானி சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி வெற்றிகரமாக தரை இறக்கினார்.

விமான நிலைய அதிகாரி கூறுகையில் , முழு அவசர கால நிலை உறுதிப்படுத்த பின்னர், விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பத்திரமாக ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.