திருச்சி, ஷார்ஜா இடையே ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஏப்ரல், மே மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Wikipedia

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதாலும், கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்ததாலும் சர்வதேச விமான போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கும், ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 617 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு IX 618, IX 614 என்ற விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது.

நாளை (24/03/2022) முதல் ஏப்ரல், மே மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.