திருச்சி, துபாய் இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகின்றன.
திருச்சி, துபாய் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை குறித்துப் பார்ப்போம்!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் துபாய் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வரும் நிலையில், தினசரி விமான சேவையை வரும் மார்ச் 23- ஆம் தேதி முதல் வழங்கவுள்ளது. திருச்சியில் இருந்து துபாய்க்கு IX 611 என்ற விமானமும், துபாயில் இருந்து திருச்சிக்கு IX 612, IX 616 என்ற விமானங்களும் இயக்கப்படவுள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, துபாய் இடையேயான ‘இண்டிகோ’ விமான சேவை குறித்துப் பார்ப்போம்!
இண்டிகோ நிறுவனம் (IndiGo), திருச்சி மற்றும் துபாய் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. திருச்சியில் சென்னை, பெங்களூரு ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, டெல்லி வழியாக நாள்தோறும் 5- க்கும் மேற்பட்ட விமானங்களை துபாய்க்கு இயக்கி வருகிறது. அதேபோல், துபாயில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், சென்னை வழியாக திருச்சிக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை, உள்ளிட்ட மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.