கனமழை காரணமாக கடல் போல் காட்சியளிக்கும் திருச்சி விமான நிலையம்!!

திருச்சியில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக திருச்சி விமான நிலையம் முழுவதும் கடல் போல் காட்சி அளித்தது.

திருச்சி விமான நிலையம் தண்ணீரில் மிதக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அச்சமயம் விமான நிலையம் சென்றோர் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தண்ணீரில் மிதக்கும் விமான நிலையத்தை நேரலை மூலம் பகிர்ந்தனர்.

காணொளி:

மக்கள் அதிகம் வந்து செல்லும் இதுபோன்று முக்கிய இடங்களில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்பது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் இந்நிகழ்வு கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.