Train Fare Hike: ஜனவரி 1 முதல் ரயில் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Train fare Hiked from jan 1 2020
Train fare Hiked from jan 1 2020

ரயில்வே அமைச்சகம் ஜனவரி 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமலானது.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2010 முதல், ஏசி ரயில் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட்டில் ஒரு கிலோமீட்டருக்கு கூடுதலாக 4 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத ரயில்களுக்கு 2 பைசா கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – முப்படைகளுக்கும் தளபதியான பிபின் ராவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த ரயில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

IRCTC - ரயில் டிக்கெட் விலை உயர்வு அறிக்கை
IRCTC – ரயில் டிக்கெட் விலை உயர்வு அறிக்கை

ரயில் கட்டணத்தை உயர்த்துவதாக ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இதனால், 2020 முதல் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது புதிய திருத்தப்பட்ட கட்டணத்தில் புறநகர் ரயில்கள் விடப்படுகின்றன. மேலும், முன்பதிவு கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம் போன்றவற்றுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அவ்வப்போது அறிவுறுத்தலின் படி விதிக்கப்படும்.

இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை – சுவர் விபத்தில் பலியானோரின் உறவினர்கள் உறுதி

நேற்று காலை ரயில்வே துறை, பாதுகாப்புப் படையினரான (ஆர்.பி.எஃப்) ரயில்வே பாதுகாப்புப் படையை இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை என்று பெயர் மாற்றியது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படியும் அமைச்சரவை முடிவின்படியும் குரூப் A அந்தஸ்தை ஆர்.பி.எஃப்.-க்கு வழங்கியதன் விளைவாக, ஆர்.பி.எஃப் இனி இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது”என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.