தமிழகத்தில் COVID-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு..!

The number of positive COVID-19 patients in Tamil Nadu rose to nine
The number of positive COVID-19 patients in Tamil Nadu rose to nine

தமிழகத்தில் நேற்று (மார்ச் 22) மட்டும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த 43 வயதான ஆடவர் மற்றும் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 64 வயதான பெண்மணி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.