தெலங்கானா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

Telangana Veterinarian's Rape Murder Case accused Encounter
Telangana Veterinarian's Rape Murder Case accused Encounter

Hyderabad Rape Case: ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் தெலங்கானா போலீசார் என்கவுண்டர் செய்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்று, எப்படி அந்த சம்பவத்தை நிகழ்த்தினார்கள் என்பதை செய்துக் காட்ட சொல்லியிருக்கிறார்கள். அப்போது அந்த 4 பேரும் தப்பிக்க முயன்றதாகவும், அதனால் போலீசார் அவர்களை என்கவுண்டரில் சுட்டு தள்ளியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

27 வயதான அந்த கால்நடை மருத்துவர் நவம்பர் 27 அன்று ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் டோல் பிளாசாவில் இருந்து காணாமல் போனார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.

குற்றவாளிகளில் ஒருவர் மருத்துவர் வீடு திரும்பும் போது அவரது, பைக்கின் டயரை பஞ்சர் செய்ததாகவும், அப்போது இருவர் உதவிக்கு வந்ததாகவும், அப்போது அவரை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.