கொரோனா தடுப்புப்போரில் தமிழகம் தீவிரம்; சிங்கப்பூரில் இருந்து வந்தவரை தொடர்ந்து விசாரிக்கும் ஆட்சியர்..!

Kanyakumari: A worker sprays disinfectant in the wake of deadly coronavirus, at a quarantine ward of Kanyakumari Government Medical College, Tuesday, March 17, 2020. (PTI Photo) (PTI17-03-2020_000179B)

கொரோனாவிற்கு எதிரான கண்காணிப்பில் தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கி இருக்கும் நபர்களை தமிழக அரசு மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தற்போது வரை, அரசின் வீட்டு கண்காணிப்பில் 2 லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 66 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!

கடந்த மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த பல்வேறு நபர்கள் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தூத்துக்குடிக்கு நபர் ஒருவர் வந்தார். தன்னுடைய உறவினரின் இறுதி சடங்கிற்காக தூத்துக்குடி வந்து இருந்தார். இவருக்கு கொரோனா அறிகுறி இல்லை.

ஆனாலும் இவர் சிங்கப்பூரில் இருந்து வந்தவர் என்பதால், இவரின் தொலைபேசி எண்கள் மற்றும் விலாசம் அவரிடம் இருந்து விமான நிலையத்திலேயே வாங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இவரை வீட்டிலேயே 1 மாதம் இருக்கும்படி தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி, கடந்த 15 நாட்களாக தினமும் தூத்துக்குடி ஆட்சியர் இவருக்கு நேரடியாக போன் செய்து உடல் நலம் குறித்து விசாரிக்கிறார்.

அதோடு அவர் எங்கே இருக்கிறார், வீட்டில் சரியாக விதிமுறையை பின்பற்றி இருக்கிறாரா என்றும் கடுமையாக சோதனை செய்து வருகிறார்.

இவரின் வீட்டிலும் தனிமைப்படுத்தல் செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.