சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த இருவர் வீட்டின் முகப்பில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்கர்; தொடர் கண்காணிப்பு..!

சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தில் கண்டாச்சிபுரம் வந்த இளைஞர் சுகாதாரத் துறையினரால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17ம் தேதி வந்த அந்த இளைஞரை நோய் தொற்று இல்லாத நிலையிலும், முகையூர் வட்டார சுகாதாரத் துறையினர், தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வழியாக வந்த இருவர் உட்பட தமிழகத்தில் 15 பேருக்கு COVID-19 தொற்று..!

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் படி நேற்று காலை டாக்டர் சுகுமாறன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அந்த இளைஞரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினர்.

சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வி.ஏ.ஓ., சின்னதுரை, வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜாராமன், சையத் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் தெருவில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அதே போல, திண்டிவனம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய ஒருவர், சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து சென்றுள்ளார்.

கடந்த 22ம் தேதியிலிருந்து வரும் 4ம் தேதி வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விலகி இருப்பதற்காக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் இந்த நோட்டீஸ்கள் வீட்டின் கதவுகளில் ஒட்டப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு..!

#Tamil Nadu #COVID-19 #Homequarantine #கொரோனா வைரஸ் #கொரோனா தமிழ் news #கொரோனாதமிழ்நாடு #coronavirus today news in tamil #coronavirus Latest news in tamil