இந்தியா முழுவதும் கடந்த 8 மாதத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்த அதிர்ச்சி தகவல்!!

இந்தியா முழுவதும் கடந்த 8 மாதத்தில் பன்றிக்காய்ச்சலால் 27,594 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 1,138 பேர் உயிரிழந்துள்ளனர், என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப் ளுயன்சா வைரஸ் கிருமி) வேகமாக பரவியது. ஆயிரக் கணக்கானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பன்றிக்காய்ச்சலால் ஏராளமா னோர் உயிரிழக்க நேரிட்டது. பின்னர், எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுக்குள் இருந்த பன்றிக்காய்ச்சல் 2015-ம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 3 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். 2016-ம் 1,786 பேரும், 2017-ம் ஆண்டு 38,811 பேரும், 2018-ம் ஆண்டு 1,128 பேரும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரைல் 27,594 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காய்ச்சலின் தீவிரத்தால் 1,138 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் தேசிய நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ராஜஸ் தானில் 5,057 பேரும், குஜராத் தில் 4,833 பேரும், டெல்லியில் 3,584 பேரும் பன்றிக்காய்ச் சலால்பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச் சலால் 468 பேர் பாதிக்கப்பட்ட தில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, “தமிழ கத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டுள் ளன. அதனால்தான் மற்ற மாநிலங்களைவிட தமிழகத் தில் பாதிப்பு குறைவாக உள் ளது” என்றனர்.