தமிழ்நாடு: சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், லண்டன், மலேசியா, தாய்லாந்து, கொழும்பு, ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாயில் இருந்து 10 விமானங்கள் வந்தன.
வெளிநாடுகளில் இருந்துவரும் அனைத்து பயணிகளையும், விமான நிலைய மருத்துவ குழுவினர் நவீன கருவிகள் மூலம் தீவிரமாக பரிசோதனை செய்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு, அடுத்த 14 நாட்கள் அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டு, அவர்களின் கையில் முத்திரையிடப்பட்டது.
இதனை அடுத்து, இவர்கள் தொடர்ந்து வீடியோ கால் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த 10 விமானங்களில் பயணம் செய்த 65 வயதுக்கு மேற்பட்ட 73 முதியோர்களை விமான நிலைய மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக தாம்பரம் சானடோரியம் அரசு சிறப்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.