‘இலங்கையில் தேசிய கீதம் இனி தமிழில் பாடப்படாது’ – இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் வரும் சுதந்திர தினம் முதல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும், தமிழ் மொழியில் பாடப்படாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் 3வது கொரோனா வைரஸ் பாதிப்பு – மாநில பேரிடராக அறிவிப்பு

இலங்கையில் பெருவாரியாக வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை கொண்டுவரப்பட்டது.

ஆனால், சமீபத்தில் நடந்த தேர்தலில் சிங்கள சமூகத்தைப் பெருவாரியாகக் கொண்ட கோத்தபய ராஜபக்சவின் கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வரும் 72-வது சுதந்திர தினத்தில் இலங்கையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட உள்ளது. இதை இலங்கை உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தைத் தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் பாடுவதை அனுமதித்த போதிலும் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த குழந்தை – தனி கண்ணாடி அறையில் வைத்து சிகிச்சை (வீடியோ)