சிங்கப்பூர் மாணவர்கள் பங்குபெறும் சர்வதேச சிலம்ப போட்டி திருச்சியில்..!

Singapore students will participate international chilambu competition

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து மாணவர்கள் பங்கு பெரும் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் உயர்நிலை பள்ளியில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

இது குறித்து மலேசிய சிலம்ப கோர்வை மற்றும் சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழக நிர்வாகி அன்பழகன் கூறியதாவது: டிசம்பர், 1ம் தேதி, சிங்கப்பூரில் நடந்த போட்டியில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் திருச்சியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சர்வதேச சிலம்ப போட்டி நடைபெற உள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் போட்டிக்கான குழு தலைவராக ஜெயபால், துணை தலைவராக செந்தில், செயலாளராக சிவா, இணை செயலாளராக சிங்கப்பூர் மருதீஸ்வரன் மற்றும் திருச்சி சிலம்ப மாஸ்டர் ஜெயக்குமார் ஆகியோரும், ஒருங்கிணைப்பாளராக மோகன் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.