திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது!

தற்போது வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்துக்கு சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் வரும் சில பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடத்தல் தங்கங்களை தொடர்ந்து பறிமுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்புகளில் 10ல் ஒன்பது பேர் வெளிநாட்டினர்!

இந்நிலையில், நேற்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த 3 பயணிகளிடம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள், தங்கள் உடலில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது சோதனையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்ற நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது உட்பட மொத்தத்தில் 3 கிலோ 28 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் இந்திய மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 720 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமாக முகக்கவசங்களை பெற்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…