இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில் அரபுநாடான UAE இருக்கும் !

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு “ஆர்டர் ஆப் சயீத்” விருது பெறுவதற்காக சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Rupay கார்டை அறிமுகம் செய்துள்ளார்.

அமீரகத்தில் 21 வணிகங்கள் மற்றும் 5000 ஏடிஎம் இயந்திரங்களில் ஏறக்குறைய 1,75,000 வணிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்தியாவின் Rupay கார்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சனிக்கிழமை நடைபெற்ற அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், பூடான், மியான்மர், நேபாள் நாடுகளை தொடர்ந்து முதல் மத்திய கிழக்கு நாடுகளில் UAE, RUPAY கார்டு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவை சேர்ந்த மாஸ்டர் கார்டு மற்றும் விசா ஆகியவை மட்டுமே மொத்த வங்கி சந்தையில் 60 சதவிகிதம் பங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. மேலும் இந்தியாவில் பெரும்பாலும் இவ்விரண்டு கார்டுகள் மட்டுமே வங்கி சந்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

பயனர்களின் தகவல்கள் இந்தியாவை தாண்டி அமெரிக்காவில் சேகரிப்பட்டன. இதனை மாற்ற 2014-ல் பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. உடனடியாக இந்தியாவின் சார்பில் RUPAY கார்டு அறிமுகபடுத்தப்பட்டு முதல்கட்டமாக அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பொதுத்துறை விநியோகிக்கப்பட்டு இந்தியாவின் சந்தையை விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளிடம் இருந்து இந்திய தயாரிப்பான RUPAY கைப்பற்றியது.

இதனால் இந்தியாவின் திட்டம் குறித்து அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார். ஆனால் இந்தியா அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார் மோடி.

அரசுமுறை பயணமாக UAE சென்றுள்ள மோடி, UAE நாட்டில் இந்தியாவின் தயாரிப்பான RUPAY கார்டினை அறிமுகம் செய்துள்ளார். அதோடு நில்லாமல் RUPAY பயன்பாட்டை உடனடியாக சந்தைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தானே இந்தியாவின் RUPAY கார்டினை பயன்படுத்தி ஒரு கிலோ லட்டினை வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

விருதை பெறுவதற்காக மோடி செல்கிறார் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தியாவின் RUPAY சந்தையை விரிவுபடுத்தி அதிரடி கொடுத்துள்ளார். இதன் மூலம் UAE-ன் மொத்த வருமானத்தில் 7% வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் RUPAY கொண்டுவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் Emirates NBD,  First Abu Dhabi Bank மற்றும் Bank of Baroda ஆகிய மூன்று வங்கிகள் விரைவில் RUPAY கார்டை வழங்கும், என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.