‘பொருளாதார தீவிரவாதி’ – இந்தியாவுக்கு வந்த அமேசான் சிஇஓ-க்கு எதிராக வணிகர்கள் போராட்டம்

Image Credit - Business Insider
Image Credit - Business Insider

Amazon CEO Jeff Bezos in India: உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெஃப் பெசோஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

ஸ்பைடர் மேன் போல் கட்டிடங்களுக்கு இடையே தாவ முயன்ற இந்திய – அமெரிக்க மருத்துவ மாணவர் பலி

டெல்லியில் நடந்த Smbhav மாநாடு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “21 ஆம் நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும். இந்தியாவின் சிறிய வியாபரங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போகிறோம். இங்கே இருக்கும் பன்மைத்துவம், இதன் ஆற்றல், இதன் வளர்ச்சி… இந்த நாடு உண்மையில் மிக ஸ்பெஷலானது. இது ஒரு ஜனநாயக நாடு என்பது கூடுதல் சிறப்பாகும். 2025 ஆம் ஆண்டுக்குள் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் 10 பில்லியன் டாலர்கள் அளவிலான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய அமேசான் முயலும் என்றார்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் வியாபரங்கள் குறித்து இந்தியாவின் போட்டிகளுக்கான கமிஷன், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், பெசோஸின் இந்தியப் பயணமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அனைத்திருந்த வணிகர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளரான பிரவீன் கந்தேல்வால், “இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையானது அனைத்துவித கட்டுப்பாடுகள், ஆரோக்கியமற்ற செயல்பாடுகள், நெறிமுறைகளுக்கு உட்படுடாத வியாபாரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறோம். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் தேசிய அளவிலான போராட்டங்கள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய வணிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சம் வணிகர்கள், பெசோஸின் வருகைக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினர். இந்தியாவின் உள் நாட்டுச் சந்தையை அமேசான் சீர்குலைக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தண்ணீர் வறட்சி – 5000 ஒட்டகங்களை கொன்ற ஆஸ்திரேலியா

அனைத்திந்திய வணிகர்கள் சங்கத்தின் சுமித் அகர்வால் தனது ட்வீட்டில், “சிறு வணிகர்களை அமேசான் அழித்து விடும் என்றும், பெசொஸ் ஒரு ‘பொருளாதார தீவிரவாதி‘ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமேசான், இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.