வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு தன்னுடைய நாட்டிற்கு திரும்பிய நபர் மனைவியுடன் விபத்தில் உயிரிழந்தார்.
சவுதியில் கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து வந்தவர் ஷியாம்குமார், கேரளா மாநிலம் அடூர் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த விடுமுறையில் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் சவுதிக்கு திரும்ப வேண்டிய நிலைக்கு ஷாம் தள்ளப்பட்டார்.
அதனால், இந்தமுறை வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு மனைவியுடன் வாழ்க்கையை துவங்க பல்வேறு கனவுகளுடன் தாயம் திரும்பினார்.
சில நாட்களுக்கு முன்பு தாயகம் திரும்பிய ஷாம் நேற்று மனைவியுடன் வெளியை சென்றுள்ளார். அவர்கள் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் உள்ளூர் பேருந்து அவர்கள் மீது மோதி கவிழ்ந்து. இதில் ஷியாம்குமார் (30) மற்றும் அவரது மனைவி ஷில்பா சத்யன் (27) இரண்டு பேருமே பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டனர்.
பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கயிறுகட்டி பேருந்தை விரைவாக அப்புறப்படுத்தி அவர்களை மீட்டனர். ஆனால் அவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தனர்.
இதையடுத்து பல கனவுகளுடன் தாயகம் திரும்பி அந்த தம்பதிகள் மரணத்திலும் ஒன்றாக இணைந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி சவுதியில் அவருடன் வேலை செய்த நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் கூறுகையில் ஷாம் தன்னுடைய மகிழ்ச்சியான புதிய வாழ்க்கையை குறித்து எப்பொழுதும் பேசிய வண்ணம் இருப்பார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.