உலகையே திரும்பி பார்க்க வைத்த நேசமணி..!

சும்மா விளையாட்டா போட்டு விட்ட ஒரு கமென்ட் உலகையே இன்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. உலக அளவில் ட்டெண்டிங்யில் முதல் இடம் பிடித்த #PrayforNesamani ஹேஸ்டாக். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் நேசமணியை பற்றிய பேச்சு தான்.

இதற்கு விதை போட்டவர் துபாய் நாட்டில் வேலை பார்த்து வரும் விக்னேஷ் பிரபாகர் என்பவர் ஆகும். The engineering learner’s என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியல் படத்தை காட்டி இதற்கு உங்கள் நாட்டில் பெயர் என்ன ? என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு விக்னேஷ் பிரபாகர் இதன் பெயர் சுத்தியல், இது ‘டங் டங்’ என்று ஒலி எழுப்பும், ஜமின் பேலஸ்சில் கான்ட்ராக்டர் நேசமணி தலையில் சுத்தியலை அவர் உறவினர் போட்டுவிட்டார். பாவம், என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு மற்றொருவர், ‘இவர் இப்போது எப்படி உள்ளார்’? என்று கேட்க? அதற்கு விக்னேஷ், அவர் டீம் நேசமணியை முகத்தில் தண்ணீர் தெளித்து உதவியதாகவும் கிண்டலாக பதிவிட்டார். பிறகு அவருக்காக பிராதிப்போம் என்று அவர் கூற, அதன் பிறகு இந்த #prayforNesamai ஹேஸ்டாக் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

ட்ரெண்டிங் ஆக காரணமான விக்னேஷ் பதிவு

இந்திய நாட்டின் பிரதம மந்திரி பதவி ஏற்பு விழாவை பின்னுக்கு தள்ளி இந்த சிறிய பொறி மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கேப்பில் சில விளம்பர நிறுவனங்கள் தங்களின் விளம்பர உக்தியை இந்த ஹேஸ்டாக் இல் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மேலும், நெட்டிசங்கள் இந்த கான்செப்டில் பல மீம்ஸ்களை விளாசி தள்ளினர்.

சமூக வளையதளங்களில் பகிரப்பட்ட சில மீம்ஸ்கள்: