இங்க பாருயா!! சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல்

பொங்கல் 2020, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றில், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், தங்கள் கலாச்சாரத்தையும், மரபையும் மறக்காமல் புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு, கரும்பு உண்டு பொங்கலை விமரிசையாக கொண்டாடினர்.

                                   

தைத் திருநாளை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் பயணிகளுக்கு, விமான நிலைய ஊழியர்கள் சர்க்கரைப் பொங்கல் கொடுத்து பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்கள். இது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.