சவுதி அரேபியா மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு; இந்தியாவின் RuPay கார்டு அறிமுகம்..!!

இருநாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த பயணத்தில், சவுதி அரேபியா நாட்டின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மோஷேன் அல்-ஃபட்லி மற்றும் எரிசக்தி துறை மந்திரி அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல் சவுத் ஆகியோரையும் சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத்-ஐ சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். ரியாத் நகரில் நடைபெற்று வரும் எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும், இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி இந்தியாவின் RuPay கார்டை அறிமுகம் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.