பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்தியப் பெண்ணை மணக்கிறார்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி திருமணம் துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தனது திருமணத்திற்கு இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி இந்திய நாட்டை சேர்ந்த சாமியா அர்சூவுடன் ஹசன் அலிக்கு துபாயில் திருமணம் நடைபெறவுள்ளது.

மேலும், எந்த இந்திய வீரர்களை திருமணத்திற்கு அழைப்பது என்று குறிப்பிடவில்லை. ஆனால் அழைப்பவர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன் என்று ஹசன் அலி கூறினார்.

அனைத்தையும் தாண்டி நாங்கள் அனைவரும் கிரிக்கெட் தோழர்கள், என்று உருது எக்ஸ்பிரஸ் என்ற செய்திக்கு ஹசன் அலி பேட்டி அளித்துள்ளார்.

எனது திருமணத்திற்கு இந்திய வீரர்கள் வந்தால் அன்புடன் வரவேற்பேன் என்றும், இருநாட்டிற்கும் இடையேயான போட்டி அருமையாக இருக்கும் எனவும், அது களத்தில் மட்டும் தான் என்றும் கூறினார். இறுதியில் நாங்கள் அனைவரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியை ஓருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சாமியா இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் Aeronautical பட்டம் பெற்றவர். மேலும், எமிரேட்ஸ் விமான பொறியாளராக பணியாற்றி வருகிகிறார். தற்போது அவர் துபாயில் வசித்து வருகிறார், ஆனால் அவரது குடும்பத்தினர் புது டெல்லியில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.