இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் 150வது பிறந்த நாள் நிறைவை போற்றும் வகையில் அபுதாபி இந்திய தூதரகத்தில் நிறுவப்படவுள்ள காந்தி சிலை.!

73வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபியில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தில் காந்தியின் (இந்தியாவின் தேசத்தந்தை) சிலை வரும் வியாழக்கிழமை(15/08/2019) அன்று திறக்கப்பட உள்ளது.

இந்திய தூதர் “நவ்தீப் சிங் சூரி” வரும் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இந்திய தேசிய கொடியை ஏற்றியதுடன், இந்தியாவின் தேச தந்தை காந்தியின் சிலையை திறந்துவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது “இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின்” 150வது பிறந்த நாள் நிறைவை குறிக்கும் வகையில் நியமிக்கப்படவுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் அமையவிருக்கும் தேச தந்தை காந்தியின் சிலை திறப்பை அமீரக வாழ் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்ப்பார்த்த வன்னம் உள்ளனர்.