COVID-19: சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 4,800 இந்தியர்கள் பாதிப்பு – தூதர்…!

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சுமார் 4,800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுத் ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 788 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இந்திய ஊழியர்களிடையே தொற்றுநோய் பாதிப்பு லேசாக உள்ளதாகவும், அவர்களின் நிலைமை மேம்பட்டு வருவதாகவும் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் (Indian High Commissioner) ஜாவேத் அஷ்ரப் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றாலும் அவர்களுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் சிகிச்சைக்குப் பின் அவர்களது உடல்நலம் தேறிவருகிறது. சிங்கப்பூரில் இதுவரை 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் உள்ளது.

Source: The Hindu

இதையும் படிங்க : COVID-19: 16,000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்..!