திருக்குறளை தாய்லாந்து நாட்டின் மொழியில் வெளியிட்டார் இந்திய பிரதமர் மோடி!

Indian PM Narendra Modi who is in Bangkok will release the Thai translation of Thirukkural.

இந்திய பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றுள்ளார். அவருக்கு பாங்காக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த ஸ்வாஸ்திமோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நினைவு நாணயங்களை வெளியிட்டார்.

அதன் பிறகு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் அங்குள்ள இந்திய வம்சாவழியினரிடையே பேசிய பிரதமர் விவசாயம் சார்ந்த திருக்குறளை மேற்கோள்காட்டி பெருமிதம் கொண்டார்.