இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவி ஏற்றார் நரேந்திர மோடி..!

இந்திய நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றார் நரேந்திர மோடி.

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. குறிப்பாக பாரதிய ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றது. இதனை அடுத்து, 2-வது முறையாக நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தரார்.

மேலும், நரேந்திர மோடி உட்பட 25 கேபினெட் அமைச்சர்கள், 9 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர்.

இதில் மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங், அமித்ஷா, நித்ன் கட்காரி, டி.வி சதானந்த கவுடா, ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, நிரஞ்சன் ஜோதி, அர்ஜூன் ராம் மெக்வால், எஸ் ஜெய்சங்கர், ரமேஷ் போக்கரிய, பிரகாஷ் ஜவடேகர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராம் விலாஸ் பாஸ்வான், முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மமேந்திர பிரதான், டி.வி சதானந்த கவுடா, ஜிதேந்திர சிங் பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 ( வியாழக்கிழமை) மணிக்கு நடைபெற்றது. இதில் சுமார் 8000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.