‘வணக்கம்’ சொன்னால் விலகிச் செல்லும் கிருமிகள்!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எதனால், எப்படி, ஏன் உருவானது? என்ற கேள்விக்கு இதுவரை முழுமையான தெளிவான விடை கிடைக்கவில்லை. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது என்பதைத் தவிர்த்து வேறு எந்த முகாந்திரமும் இதுவரை தென்படவில்லை.

வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகள் பரவுதலை அடிப்படையிலேயே நாம் கிள்ளி எறிந்துவிட்டால், இது போன்ற தொல்லைகளை முடிந்தவரை நம்மால் தடுக்க முடியும்.

குறிப்பாக ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் போதோ, நட்பு பாராட்டும் போதோ, வாழ்த்து சொல்லும் போதோ, இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம்’ சொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதனால், வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று பரவலை நம்மால் பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

இருவர் கைக் கொடுக்கும் போது, 124 மில்லியன் அளவிலான பேக்டீரியாக்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

அதேபோல் கைகளை தட்டிக் கொள்ளும் போது, 55 மில்லியன் பேக்டீரியா தொற்று பரவுகிறது.

First Bump முறையின் போது 7 மில்லியன் தொற்று பரவுகிறது.

ஆனால், வணக்கம் சொல்லும் போது எந்த கிருமியும் உங்களை அண்டுவதில்லை.

இப்போ வணக்கம் சொல்லப் போறீங்களா? கைக் கொடுக்க போறீங்களா?