வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சினிமா பாணியில் பல லட்சம் மோசடி…!

Multi-lakh scam in cinematic style.

சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்கள், சமூக வலை தளங்களில் அதிக அளவில் வலம்வரும் ஒன்று. அதிலும் உங்கள் CV அனுப்பினால் போதும், இலவச ஆள் எடுப்பு என வகை வகையாக விளம்பரங்கள் நம்மை சுற்றி வலம்வந்துகொண்டு தான் இருக்கிறது.

மேலும், சில வேலைவாய்ப்பு ஏஜெண்டுகள் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விடுகின்றனர். குடும்ப வறுமை, வெளிநாட்டு உதவிகள் இல்லாத சூழ்நிலை காரணமாக பலர் இது போன்ற மோசடிகளில் சிக்கி தங்கள் வாழ்க்கை இழந்துவிடுகின்றனர்.

படிக்க : வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மையை எவ்வாறு அறிவது?

இந்நிலையில், வெளிநாட்டில் வேலை வங்கி தருவதாக சினிமா பாணியில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யும் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும், இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு அங்கீகரித்த உரிமம் பெற்ற ஏஜெண்டுகளை மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அணுகவும்.