இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும் – அமைச்சர் தகவல்

கொரோனா வைரஸால் முடக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்துகள் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமென்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்து, ரயில் ஆகியவற்றுக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் வரும் 25ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். படிப்படியாக விமான சேவை முழு அளவுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், 25ம் தேதி விமான சேவையை தொடங்க தயார் நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,”சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கும் தேதி என்னால் சொல்ல இயலாது.

ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருக்குள் விமான போக்குவரத்துகள் தொடரும். நிலைமையை பொறுத்து முன்கூட்டியே போக்குவரத்தை தொடங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.