இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை – சுவர் விபத்தில் பலியானோரின் உறவினர்கள் உறுதி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூரில் அமைக்கப்பட்ட தீண்டாமை சுவர் டிசம்பர் 2ம் தேதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் சிக்கி 17 பேர் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பலரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாக பல்வேறு கருத்துகள் நிலவி வந்தது. இது குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, எந்த இஸ்லாமிய அமைப்பினரும் இது தொடர்பாக தங்களை அணுகவில்லை என்றும், அவர்கள் ராமனை வழிபடும் பக்தர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 2020ல் திறப்பு..!

அப்பகுதியில் இயங்கி வரும் அமைப்பான தமிழ் புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை ”திருப்பூர், கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருக்கும் சில தலித்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற உள்ளனர்” என்று தங்களின் முந்தைய கருத்தை மாற்றி இவ்வாறு கூறியுள்ளனர். ஆரம்பத்தில் தீண்டாமை சுவர் எழுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தோல்வியுற்றது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலரும் இஸ்லாமிற்கு மதம் மாற உள்ளனர் என்று அறிவித்தது அந்த அமைப்பு.

நெல்லை மீனாட்சிபுரத்தில் 1981ம் ஆண்டு, நிறைய எண்ணிக்கையில் பட்டியல் இன மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய வரலாறு உண்டு. தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த எம்.இளவேனில், தீண்டாமை சுவருக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீண்டாமையை ஒழிக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. அது மதம் மாற்றம் தான் என்று அவர் கூறினார். ஆனால் மேட்டுப்பாளையம் கிராம மக்கள் தாங்கள் இஸ்லாமுக்கு மாறமாட்டோம் என்று கூறியது தொடர்பாக கேள்வி கேட்ட போது, காவல்துறையினர் அங்கே இருப்பதால் எங்களால் உள்ளே செல்ல இயலவில்லை. ஆனால் ஜனவரி 5ம் தேதி தலித்துகள் 300 பேர் இஸ்லாமிய மதத்தினை தழுவுவார்கள் என்று அவர் கூறினார். மதம் மாறும் நபர்கள் யார் என்று கேட்ட போது கோவை, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்கள் இஸ்லாமுக்கு மாறுகிறார்கள் என்று கூறினார்.

விமான டிக்கெட் கடனாக வழங்கமுடியாது! – ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

நடூர் மக்களின் கருத்து

நடூரில் தினக்கூலிக்கு செல்லும் 70 வயது சுப்ரமணியனிடம் மதமாற்றம் குறித்து கேட்ட போது, இஸ்லாம் அவர்களுக்கு நல்லது. இந்து மதம் எங்களுக்கு நல்லது. நாங்கள் ஏன் மதம் மாற வேண்டும்?. சுவர் இடிந்த பிறகு நிறைய அமைப்புகள் எங்களை வந்து சந்தித்தது. அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக எங்களை அவர்கள் பயன்படுத்த கூடாது என்றார். காளி என்ற 50 வயது விவசாய கூலியிடம் கேள்வி கேட்ட போது, நாங்கள் அனைவரும் இந்துக்கள். எங்களுக்கு மதம் மாறும் எண்ணம் ஏதும் இல்லை. இது போன்ற செய்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் தன் மனைவி திலகவதியை இழந்த 50 வயது கே. ஈஸ்வரன் கூறுகையில் இது போன்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த தீண்டாமை சுவர் தனியார் சொத்தை எஸ்.சி. காலனியில் இருந்து மறைக்கும் வகையில் கட்டப்பட்டது. இது தொடர்பாக இரண்டு முறை நாங்கள் அவரிடம் பேச முற்பட்டோம். ஆனால் அவர் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ செய்யுங்கள் என்றார். ஆனால் அதற்கும் இஸ்லாம் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பினார். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் ராமனை வணங்குபவர்கள். மார்கழி மாதம் அசைவம் கூட உண்ண மாட்டோம். இங்கு ஒரு இஸ்லாமிய குடும்பம் கூட இல்லை. எங்களை யாரும் இதற்காக அணுகவில்லை. இவை அனைத்தும் பொய் என்று கூறினார் மணியம்மா.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் மற்றும் எம்.பியுமான ரவிக்குமாரிடம் கேள்வி கேட்ட போது, இந்த பிரச்சனை தொடர்பாக, பட்டியல் இனத்தோர் வாரியம் அங்கே செல்ல வேண்டும் என்று அரசை வற்புறுத்தினேன். அவர்கள் சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனை எதிர்த்து போராடிய பலரும் காவலில் உள்ளனர். தடுப்புச்சுவர் எழுப்பியவரோ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிவிட்டார். இதனை அரசு எதிர்க்கவில்லை. இது போன்ற செயல்களில் அரசின் பாகுபாடுகள் இருப்பதால் தான் மதமாற்றம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிறது. குறைவாகவே மதம் மாறுகிறார்கள் என்றாலும் அதில் உண்மை உள்ளது என்று அவர் கூறினார்.