சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினர்; பட்டியலில் சிங்கப்பூர் இந்தியாவுடன் கடும் போட்டி..!

Foreigners medical treatment

இந்தியாவின் பல பகுதிகளில் மருத்துவ சேவை மையங்கள் உருவாகி வருவதால், தமிழகம் இந்தத் துறையில் முன்னணியில் நீடிக்க, போக்குவரத்து வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வெளிநாட்டில் இருந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு நியாயமான கட்டணங்களில் மிக நவீன சிகிச்சைகளை அளிக்கும் துறையான மருத்துவ மதிப்பு பயணங்களில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், இன்று இந்தியா வரும் மொத்த வெளிநாட்டு நோயாளிகளில் 15 சதவீதத்தினர் தான் தமிழகம் வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்திற்கு 27 சதவீத வெளிநாட்டு நோயாளிகள் செல்கின்றனர். கேரளாவிற்கு 5 முதல் 7 சதவீதத்தினர் செல்வதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) அறிக்கை கூறுகிறது. புதிய முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள், தம் மருத்துவ சேவை துறைகளை மேம்படுத்தி வருவதால், தமிழகம் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

முதல் இடத்தை தமிழகம் மீண்டும் எட்ட, நோயாளிகளை அவர்களின் நாடுகளில் அணுக வேண்டும் என்கிறார் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.ஏ.ஆபிரகாம்.

கேரளா மற்றும் பெங்களூருவை சேர்ந்த மருத்துவமனைகள், நற்பெயரை ஈட்டும் நோக்கில், வெளிநாடுகளில் மருத்துவமனைகளை அமைத்துள்ளன. மிக நவீன சிகிச்சைகளுக்காக அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், இந்தியாவில் அந்த மருத்துவமனைகளை தேர்வு செய்வது இயல்பாக நடக்கிறது.

“இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களில், இருபதில் ஒரு பங்கு செலவில், நாங்கள் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறோம். ஆனால் நம்முடைய சேவை மற்றும் கட்டமைப்புகளில் போதாமைகள் உள்ளன” என்றும் அவர் கூறுகிறார்.

மிகத்தரமான, மிக நவீன வகையான மருத்துவ சேவைகளில் சென்னை முன்னணியில் உள்ளது. ஆனால் போக்குவரத்து வசதிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள் போன்ற இரண்டாம் கட்ட அம்சங்களில் பின் தங்கியுள்ளது. உதாரணமாக ஆப்பிரிக்க நாடுகள் விஷயத்தில் பின் தங்கியுள்ளோம். ஏனென்றால், பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால் சென்னைக்கு அப்படி எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்கிறார் ஜோஸ். மருத்துவ சேவை மையமாக கொச்சி வளர்ந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பாதிப்படைந்துள்ளது.

மருத்துவ சிகிச்சைகளுக்காக சென்னை வரும் வெளிநாட்டவர்களில் சுமார் 55 சதவீதத்தினர் முன் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்காக வருகின்றனர். புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 20 முதல் 30 சதவீதத்தினர் வருகின்றனர். ஆனால் 55 சதவீதத்தினரை விட இந்த 30 சதவீதத்தினர் சிகிச்சைகளுக்காக அதிகம் செலவு செய்கின்றனர்.

தமிழகம் ஒரு மருத்துவ சேவை மையம் என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சென்னை மருத்துவமனைகள் இதில் முன்னோடிகளாக முன்பு இருந்தன. ஆனால் பின்னர் டெல்லி போன்ற நகரங்கள் இதில் முந்திவிட்டன என்கிறார் சென்னையில், மருத்துவ பயணிகள் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கி நடத்தும் முகமது ஜாக்கரியா அகமது.

“சென்னையில் அனைத்தும் உள்ளது; மிகச் சிறந்த மருத்துவர்கள், மிகச் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள். இந்திய சந்தையின் பெரும் அளவை கண்டு, பெருநிறுவனங்கள் தங்களின் மருத்துவ கருவிகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்தவதற்கு முன்பு இந்தியாவில் சந்தைபடுத்துகின்றன.

நமக்கு இனி பிராண்ட் உருவாக்கம் தான் தேவைப்படுகிறது. இதை மருத்துவமனைகள் சிறிய அளவில் செய்து வருகின்றன. அபுதாபியை எடுத்துக்கொண்டால், அதன் அரசு அதை ஒரு மருத்துவ சேவை மையமாக மிகத் தீவிரமாக முன்னெடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

இந்தியாவின் மருத்துவ பயண மதிப்பு (எம்.வி.டி) துறையின் அளவு 2020-ல் 900 கோடி டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உலக சந்தையின் மதிப்பு 5,376 கோடி டாலர்களாக இருப்பதாக, எப்.ஐ.சி.சி.ஐ.க்காக ஏர்னஸ்ட் அன்ட் யங் தயாரித்த அறிக்கை கூறுகிறது. 2025-ம் ஆண்டு வரை இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சி.ஏ.ஜி.ஆர்) சராசரி ஆண்டு வளர்ச்சி 29 சதவீதமாக இருக்கும் என்று கூறுகிறது.

“பயணங்கள் இன்றும் பிராந்திய அளவில் உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள், மருத்துவ சிகிச்சைகளுக்காக கேரளா செல்ல விரும்புகின்றனர்” என்கிறார் டாக்டர் ஆபிரகாம். இந்தியாவில், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைகளுக்காக அதிக அளவில் தமிழகம் வருகின்றனர். வெளிநாடுகளை பொறுத்தவரை, வங்காளதேசத்தில் இருந்தும், புலம் பெயர்ந்த தமிழர்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக தமிழகம் வருகின்றனர்.

சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்தத்துறையில் இந்தியாவுடன் கடுமையாக போட்டியிடுகின்றன. உலக அளவில் போட்டித்திறன் குறியீடு பட்டியலில், 140 நாடுகளில் சிங்கப்பூர் 17 வது இடத்தில் உள்ளது, இந்தியா 34-வது இடத்தில் உள்ளது. (போட்டியிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது).

தற்போது சுமார் 50 சதவீத வெளிநாட்டு நோயாளிகள் வங்காளதேசத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து வருகின்றனர். இவர்களில் பலரும் வெளி நோயாளிகளாக வருகின்றனர். இவர்களில் 100-க்கு 30 நோயாளிகளுக்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை தேவைப்படுகிறது.