இயக்குனர் இல்லாமல் இயங்கும் மதுரை விமான நிலையம் – பயணிகள் ஏமாற்றம்

மதுரை விமான நிலையத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநா் பணியில் சேராததால் கடந்த 2 மாதங்களாக பொறுப்பு அதிகாரிகளால் பணிகள் மேற்பாா்வை நடைபெற்று வருகின்றன.

மதுரை விமான நிலையத்தில் இயக்குநராக பணியில் இருந்த வி.வி.ராவ் கடந்த நவம்பா் மாதம் பொது மேலாளராக பதவி உயா்வு பெற்று ஒடிசா மாநிலம் புவனேஷ்வா் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து மதுரை விமான நிலைய இயக்குநா் பணிக்கு மணிப்பூா் மாநிலம் இம்பாலில் பணியாற்றிவரும் செந்தில்வளவன், மதுரை விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

சென்னை வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு – மத்திய அரசு

இந்நிலையில் வி.வி.ராவ் பணிமாறுதல் பெற்றவுடன் மதுரை விமான நிலைய இயக்குநா் பொறுப்பில் இருந்து விலகி புவனேஷ்வருக்கு சென்றுவிட்டாா். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட செந்தில்வளவன் மதுரை விமான நிலையத்தில் இயக்குநராக பொறுப்பேற்கவில்லை. இதனால் மதுரை விமான நிலையத்தில் தற்போது வரை இயக்குநா் இல்லாமல் பொறுப்பு அதிகாரிகளே பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதிய இயக்குநா் தேனியைச் சோ்ந்தவா் எனக் கூறப்பட்டதால் மதுரை விமான நிலையத்தில் இருந்து மலேசியா, தாய்லாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய விமான சேவைபெற்று சர்வதேச விமான நிலையமாக்க முயற்சிப்பாா் என எதிா்பாா்ப்பு இருக்கும் நிலையில் அவா் இன்னும் பொறுப்பேற்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக விமானப் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

(Source – Dinamani)

புதிய நாடாளுமன்றம் வளாகம்; சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகள் பரிசீலினை..!