சிங்கப்பூரில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தல் குறித்து மதுரை சுங்கப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, சிங்கப்பூரில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்க புலனாய்வுத்துறை துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார், தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
இதையும் படிங்க : மாணவிக்கு தொல்லை; சிங்கப்பூரில் பணிபுரிந்தவரை மாஸ்டர் பிளான் போட்டு கைது செய்த போலீஸ்..!
அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார் கூறும்போது, “அந்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 932 கிராம் எடை இருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.39 லட்சத்து 85 ஆயிரத்து 232 ஆகும்.”
இதையும் படிங்க : பேட்மிண்டன்; முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் வெற்றி..!
கடந்த 2019 ஆண்டு முதல் தற்போது வரை மதுரை சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 9933 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 26 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.