இண்டிகோ விமானங்களில் தொடர் கோளாறு – பயணிகள் கடும் அவதி..!

IndiGo Plane Turns Back After Engine Stalls Mid-Air, 4th Incident This Week

கடந்த புதன்கிழமை, மாலை கொல்கத்தாவிலிருந்து புனே புறப்பட்ட இண்டிகோ A320neo விமானம், 9000 அடி உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் பிராட் மற்றும் விட்னி இன்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

அக்டோபர் 24 முதல் 26 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களில், மூன்று விமானத்தில் பி.டபிள்யூ என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது, விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ திங்களன்று விமானத்தின் வளாகத்திற்குச் சென்று பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தரவை மதிப்பாய்வு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இண்டிகோ A320neo விமானங்களை நேரில் ஆய்வு செய்த விமான போக்குவரத்து ஒழுங்குமுறை பொது இயக்குனரகம் 16 விமானங்களின் பழைய இன்ஜின்களை 15 நாட்களுக்குள் மாற்ற உத்தரவிட்டுள்ளனர், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.