தடுமாறி விழுந்த இந்திய பிரதமர் மோடி… தாங்கி பிடித்த பாதுகாவலர்கள் – வைரல் வீடியோ..!

Viral video: India's Modi slips, falls at Ganga Ghat in Kanpur

கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்தும், புதிய செயல் திட்டம் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திருவனந்திர ராவத், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில் பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுடன் கங்கை நதியில் படகு பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மீண்டும் கரைக்கு திரும்பிய பிறகு, பிரதமர் மோடி படிக்கட்டின் மூலம் ஏறிச் செல்ல முற்பட்டார், அப்போது கால் தடுக்கி கீழே விழ, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தாங்கி பிடித்து தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

https://twitter.com/as_lingam/status/1205824625906601984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1205824625906601984&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Findia-news%2Fprime-minister-modi-stumbles-and-falling-on-stairs-at-kanpur%2Farticleshow%2F72613384.cms

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.