இந்திய நாட்டை சேர்ந்த அபிஜித் பேனர்ஜி பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றார்..!!

2019 ஆம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (அக்.14) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்திய அமெரிக்கப் பொருளாதார வல்லுநரான அபிஜித் பேனர்ஜிக்கு இந்த வருடத்துக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. அபிஜித் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் பேனர்ஜி 1983ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அபிஜித் மற்றும் எஸ்தர் இருவரும் கணவன் மனைவி ஆகும்.

முன்னதாக 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மதுக்கு வழங்கப்பட்டது.