கொரோனா பாதிப்பால் சீனாவை விட்டு வெளியேறும் பல நிறுவங்களுக்கு தமிழகம் உட்பட பல இந்திய மாநிலங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பொருளாதார சரிவில் உள்ளது. சீனாவில் இருந்து தான் இந்த வைரஸ் தொடங்கியதன் காரணத்தால் அங்குள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில் மையங்களை மாற்றத் திட்டமிட்டு உள்ளன.
அந்த நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியாவில் 4,61,589 ஹெக்டர் நிலம் தயார்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 1,15,589 ஹெக்டர் நிலம் ஏற்கனவே தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ளது. இது ஐரோப்ப நாடுகளில் இருக்கும் லக்சம்பர்க் நாட்டை போல இருமடங்காகும்.
தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட உள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்திய பொருளாதார சரிவில் உள்ளதால் அதனை ஈடுகட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள நிறுவனங்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு இந்திய தூதரகங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.