2024ஆம் ஆண்டுக்குள் புதிய 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்..!!

பொருளாதார வளர்ச்சியைப் புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 க்குள் 100 கூடுதல் விமான நிலையங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் புதிய 1,000 பாதைகளைத் தொடங்குவது உள்ளிட்ட இந்த திட்டம், கடந்த வாரம் நடைபெற்ற 2025 க்குள் தேவையான உள்கட்டமைப்புகளை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், உள்நாட்டில் பயிற்சி பெற்ற விமானிகளின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 600 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. ‘ட்ரோன்கள்’ எனப்படும், ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒரு லட்சம்கோடி ரூபாய் செலவில் இந்த புதிய 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும், 2025ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, 350 லட்சம் கோடி ரூபாயாக எட்டும் இலக்கை அடைவதற்காக, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை இரட்டிப்பாக்க, பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.