இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அமலில் உள்ள வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை, அடுத்த மாதம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு விமான தடை நீட்டிப்பு குறித்த தகவலை இந்திய விமான சேவை பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தெம்பனிஸ் காபி கடை ஒன்றில் பெரிய விசிறி கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டது.
இருப்பினும், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் ‘ஏர் பபுள்’ என்ற திட்டத்தின் மூலம், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளுடன் இந்தியா விமான சேவையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அது போக, மற்ற பொதுவான வெளிநாட்டு பயண விமானங்களுக்கு வரும் நவம்பர் 30 வரை தடை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, அக்டோபர் 30 முதல் டிசம்பர் 30 வரை கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லலாம்.