இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை- பயண அட்டவணையை வெளியிட்டது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!

Photo: Wikipedia

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் முக்கிய நகரங்களான திருச்சி, கோழிக்கோடு, கொச்சி, மும்பை, கண்ணூர், மங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்கு வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி வரை விமான சேவையை வழங்கவுள்ளது. மேலும், அதற்கான பயண அட்டவணையையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொச்சி, தோஹா இடையே வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விமானங்களை இயக்க உள்ளது. கண்ணூர், தோஹா இடையே வாரத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும், மும்பை, தோஹா இடையே வாரத்தில் வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும், மங்களூரு, தோஹா இடையே வாரத்தில் வியாழன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும், திருச்சி, தோஹா இடையே வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுளள்து.

மேலும், திருவனந்தபுரம், தோஹா இடையே வாரத்தில் செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும், கோழிக்கோடு, தோஹா இடையே தினசரி விமானங்கள் இயக்கப்படும்; விமான சேவையானது இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.