கொரோனா வைரஸ்; அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது இந்தியா..!

கொரானா வைரஸ் நோய் உலக சுகாதார மையம் உலகம் தழுவிய கொள்ளைநோய் என்று நேற்று இரவு அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதில் முக்கிய நடவடிக்கையாக அனைத்து விசாக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவிற்கான SIA மற்றும் சில்க் ஏர் விமானங்கள் ரத்து..!

அனுமதி மறுப்பு

ஒரு மாத காலத்திற்கு இந்தியாவின் எல்லைகள் மூடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்தியாவிற்குள் வெளிநாட்டினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளதையடுத்து, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டு விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஏற்கெனவே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி நாட்டு மக்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் இப்போது இந்த 3 நாடுகளும் கூடுதலாகச் சேர்ந்துள்ளன.

யார் விதிவிலக்கு

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள், முக்கிய தலைவர்களின் வருகையைத் தவிர, வேலை மற்றும் ப்ராஜெக்ட் விசாக்களுக்கு இன்று அதிகாலை 12 மணி முதல் (13/03/2020) தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவுக்குச் கட்டாயமாக செல்ல வேண்டிய நிலையில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அருகிலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளி (OCI)

OCI எனப்படும் வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியினருக்கான பயண அனுமதி அட்டை வைத்திருப்போர், அதைப் பயன்படுத்தி இனி இந்தியா செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்திய தாயகம் செல்வோருக்கு

சிங்கப்பூரில் இருந்து இந்திய தாயகம் செல்வோர், 14 நாள்களுக்குத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும் நிறுவனத்தில் பணி நிமித்தமாகச் சென்றுவிட்டு வந்தால், அடுத்த 14 நாட்களுக்கு அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

பயணிகள் இந்தியாவிற்குள் நுழையும் முன், விமான நிலையத்தில் தங்கள் உடல்நிலை குறித்த விவரங்களையும், தங்களது தங்குமிட விவரங்களையும் தெரிவிக்கவேண்டும்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் கவனத்திற்கு..!

மேலும், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லப்போவதில்லை என்ற பிரகடனப் படிவத்திலும் கையெழுத்திட வேண்டும். மேலும் அதை மீறக்கூடாது, அதைப் பின்பற்றுவது கட்டாயம்.

அவசர தேவை இல்லை என்றால் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியா வருவதை தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு நாடு திரும்பும் இந்தியர்கள் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமை படுத்தப்படுவார்கள்.

இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்டில் தெரிவிக்கவும்.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil