IND vs SL 1st T20: ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், வேக்குவம் கிளீனர் – கிரவுண்டை உலர வைக்க ‘அபார’ யுக்தி

IND vs SL 1st T20
IND vs SL 1st T20

India vs SriLanka 1st T20: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோவில் ‘சொர்க்கவாசல்’ திறப்பு

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மழை நின்ற பிறகு, பிட்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. மீண்டும் மழை பெய்து ஓய, வேக்குவம் கிளீனரை வைத்து ஆடுகளத்தை காய வைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அதன் பிறகு அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் மூலமும் ஆடுகளத்தை காய வைக்க முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும், பிட்சை குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்த முதல்வர் பழனிசாமி (வீடியோ)

இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜன.7) இந்தூரில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3வது டி20 போட்டி புனேவில் ஜன.10ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.